எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நிலமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்தது சிபிசிஐடி
Advertisement
எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், தற்போது 15 நாள் காவலில் சேலம் சிறையில் உள்ளார். காவல் ஆய்வாளர் பிருத்விராஜை சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்து சிபிசிஐடி காவல்துறை கரூர் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
Advertisement