லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் விஷால் வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் பலமுறை நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் குறுக்கு விசாரணையானது நடத்தப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி குறுக்கு விசாரணையை மேற்கொண்டார். லைகா நிறுவனத்திற்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2 நாட்கள் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி சுமார் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நடிகர் விஷல் பதிலளித்தார்.
இதனை அடுத்து வக்கில்களின் வாதம், பிரதிவாதம் நடைபெற்றதை அடித்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.