லுப்தான்சா நிறுவனத்தில் 4000 வேலை குறைப்பு
பிராங்பர்ட்: லுப்தான்சா விமான நிறுவனம் 4000 வேலைகளை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது. லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இந்த நிலையில் வரும் 2030க்குள் 4000 வேலைகளை குறைத்து அதிக லாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லுப்தான்சா தெரிவித்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து லுப்தா்சா நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து ஆரம்ப வர்த்தகத்தில் 2 சதவீதம் உயர்ந்தன. லுப்தான்சா வெளியிட்டுள்ள அறிக்கை: டிஜிட்டல் மயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். பெரும்பாலான வேலை குறைப்பு ஜெர்மனியில் தான் இருக்கும். இந்த மாற்றங்களின் மூலம் நிறுவனத்துக்கு பெரும் லாபம் ஏற்படும்.