லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி
அதன் பின், மார்க்ரமுடன் கேப்டன் ரிஷப் பண்ட் இணை சேர்ந்தார். ஆனால், சிறிது நேரத்தில் பண்ட் (7 ரன்), ஈஷன் மலிங்கா பந்தில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினார். பின், நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். 16வது ஓவரில் ஹர்சல் படேல் பந்தில் மார்க்ரம் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர், 61 ரன்) கிளீன் போல்டாகி வெளியேறினார். 20வது ஓவரில் பூரன் (26 பந்து, 45 ரன்), 20 ஓவர் முடிவில், லக்னோ 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் மலிங்கா 2, தூபே, ஹர்சல் படேல், நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கியோரில் அதர்வா தெய்டே 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 59 ரன் குவித்து அவுட் ஆனார். பின் வந்த இஷான் கிஷன் 35 ரன்னில் வீழ்ந்தார். 18வது ஓவரில் கிளாசன் (47) அவுட் ஆனார். 18.2 ஓவரில் சன்ரைசர்ஸ் 206 ரன்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.