வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும். மேற்குவங்கம் -ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இனிய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.