நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்
சென்னை: நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-11-2025) காலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 22ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் நவ.24ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகரும். காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.