அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்
சென்னை: நேற்று (06-10-2025), மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" புயல், நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது இன்று (07-10-2025) மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுகுறைந்து காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு தென்மேற்கே சுமார் 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும். தென்மேற்கு வங்ககடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிலையில், அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. நாளை காலை மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது