தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாமரை கட்சியின் மாஜி தேசிய செயலாளர் அட்ராசிட்டியால் அலறும் இலை கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிக்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் மேற்கு மாவட்டத்தில் கடும் புகைச்சல் எழுந்துள்ளதாம். புதிய மாவட்ட நிர்வாகிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி சேலம்காரருக்கு கடிதம் எழுதியுள்ளார்களாம்.. அவரை மாற்ற வேண்டும் என்று ஒருமித்த குரலாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்களாம். கூடவே மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஒன்றிய செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலரும் அந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார்களாம்.. மேலிடத்தில் இருந்து நிர்வாகி ஒருவர் வந்திருந்தபோதும் கூட அவரை யாரும் கண்டுகொள்ளவில்லையாம். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இப்படி கோஷ்டி பூசல் உச்சத்தில் தொடர்ந்தால் என்ன செய்வது என்று மேலிட நிர்வாகிகள் கையை பிசைந்துகொண்டு இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் நிர்வாகிகள் மோதிக்கிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை இருந்துக்கிட்டிருக்கும் நேரத்தில் அவரது ஊரில் புதுசு புதுசா முளைக்குதாம் மோதல்.. மாங்கனி மாநகரில் இருக்கும் மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் வேலைகள் புயல்வேகத்தில் போய்கிட்டிருக்காம்.. இங்குள்ள பொறுப்பாளர் 24 மணிநேரமும் இதைப்பற்றியே யோசிச்சிக்கிட்டிருக்கும் நிலையில், நிர்வாகிகள் விழிபிதுங்கி போயிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதற்கிடையில் எந்நேரமும் பிரச்னைக்குரிய கொ.பட்டி பகுதியில் நிர்வாகிகள் மோதிக்கிட்ட விவகாரம் கட்சி நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்காம்..

தீயாக வேலை செய்யும் பூத் பொறுப்பாளர் ஒருவரை வட்டச் செயலாளர் ஒருவர் ஏன் ஒழுங்காக வேலை பார்க்க முடியாதா? என கேட்டதோடு சட்டையை பிடித்து கழுத்தை நெரிச்சிட்டாராம்.. அதோடு உங்க ஆட்களின் வேலையே இப்படித்தான் என கூறி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஆபாசமாக பேசிட்டாராம்..

இதனால் மனமுடைந்துபோன அந்த நிர்வாகி, கட்சியின் மூத்த உறுப்பினரான அவரது தந்தையிடம் போய் நடந்ததை கூறி அழுதாராம்.. சட்டையை பிடித்து இழுத்த விவகாரம் தொகுதி முழுவதும் பரவியிருக்கு.. இதை இப்படியே விட்டுவிட கூடாதுன்னு புறநகர் மாவட்டத்தில் இருக்கும் இலைக்கட்சி தலைவரின் நிழலானவரிடம் போய் முறையிட்டிருக்காங்க.. இதனால மாநகர பொறுப்பாளர் ரொம்பவே கோபமாயிட்டாராம்.. பல்வேறு பொறுப்புகளை சுமந்துக்கிட்டிருக்கேன்.. என்னிடம் எதையும் தெரிவிக்காமல் புறநகருக்கு புகார் எப்படி போகலாமுன்னு கேள்வியோட இருக்காராம்.. இதற்கிடையில் சமுதாயத்தை பற்றி தவறாக பேசியதால் தேர்தல் நேரத்தில் செய்யவேண்டியதை செய்வோமுன்னு ரொம்பவே கோபத்துல இருக்காங்களாம்.. அப்படியே இலைக்கட்சி தலைவரின் காதுக்கும் போயிருக்கு.. பல்வேறு குடைச்சலில் இருக்கும் நேரத்தில் இந்த விவகாரம் இலைக்கட்சி தலைவருக்கு ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன தாமரை கட்சி நிர்வாகியால் இலை கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஜூரத்தில் உள்ளார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தை சேர்ந்த மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர், தேர்தல் முடியும் வரை வாயை கட்டினால் நல்லா இருக்கும். இல்லைனா தேர்தலில் விழும் வாக்கிலும் மண் விழுந்து விடுமென இலைக்கட்சியினர் தலைமையிடம் போட்டு வைத்துள்ளனர். ஏற்கனவே, ஒரு விநாயகர் சதுர்த்தி விழாவில் இவர் பண்ண அட்ராசிட்டியால், தாமரை கட்சிக்கு பெரிய கெட்டப்பெயர்.

அடுத்தடுத்து பல சம்பவங்களில் தேவையில்லாமல், வாயை கொடுத்து சர்ச்சைகளை அதிகம் சம்பாரித்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் நல்ல பெயர் இல்லை. தற்போது மீண்டும் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வழக்கம் போல சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் அவர் எதையாவது வில்லங்கமாக பேசிவிட்டால் அது அப்படியே தேர்தலில் எதிரொலிக்கும். ஏற்கனவே மாவட்டத்தில் ரொம்ப வீக்காக இருக்கும் நமக்கு சுமையை கூடுதலாக அதிகரித்து விடும். எனவே, சீக்கிரமாக அவருக்கு வாய்ப்பூட்டு போடும் வேலையை செய்ய வேண்டுமென, தங்களது தலைமை மூலம் தாமரைக்கட்சியின் தேசிய, மாநில தலைமைக்கு அறிவுறுத்தும்படி கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகாரி ஒருவர் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, கல்லா கட்டி வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டம், பட்டுநகரமான 6 அணி ஒன்றியத்துல ராட்டினத்துல தொடங்கி மங்கலத்துல முடியுற ஊராட்சி இருக்குது. இங்க ரியல் எஸ்டேட் ஓனர்ஸ் சில மாசத்துக்கு முன்னாடி, வீட்டு மனை பிரிவு அமைக்குறதுக்காக நஞ்சை நிலத்தை வாங்கினாங்களாம்.. அப்புறம், அந்த நிலத்தை அவசர அவசரமாக வகை மாற்றம் செய்து மனை பிரிவுகள் அமைத்து, நகர் ஊரமைப்பு அதிகாரிகள் மூலம் முதற்கட்ட அனுமதியும் வாங்கிட்டாங்களாம்.. அப்புறம் வட்டாரத்தோட வளர்ச்சி ஆபிஸ்ல அனுமதி வாங்குறதுக்கு 2.60 சி, சம்மந்தப்பட்ட ஊராட்சி சார்பில் ரோடு, பூங்கா என்று அடிப்படை வசதிகள் அமைக்க ஊராட்சி நிர்வாகத்துக்கான வளர்ச்சி கட்டணமாக அரசுக்கு செலுத்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு டிமாண்ட் வெச்சாங்களாம்.. ஆனால் வரத்து கால்வாய் மட்டத்துல இருந்து 14 அடி பள்ளத்துல இருக்குறதால நீர்வளப்பிரிவு அனுமதி கொடுக்கவில்லையாம். அப்புறம், வட்டாரத்தோட வளர்ச்சி ஆபிசரை அணுகி, டிஸ்கஸ் செய்தார்களாம். அதுல 30 எல் பேரம் பேசி செட்டில்மென்ட் முடிஞ்சிட்டதாக சொல்லிக்குறாங்க..

இதனால, அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாய் 2.60 சி இழப்பு ஏற்பட்டிருச்சாம். வெறும் 11 எல் தான் அரசுக்கு செலுத்துனாங்களாம். இந்த 30 எல் சம்திங் வேட்டை தான் கிரிவலம் மாவட்டத்துல ஹாட்டாக போய்கிட்டு இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement