சுற்றுலா வந்த இடத்தில் சோகம் லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது வாலிபர் பலி; 18 பேர் காயம்
இதில் வேனில் இருந்த பரணி (19) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்; 12 பேர் லேசான காயத்துடன் தப்பினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வத்தலக்குண்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, படுகாயமடைந்த 6 பேரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்தவர்களை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர், வேனை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.