நிலக்கரி ஏற்றி சென்ற லாரி ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்தது: டிரைவர் தப்பினார்
திருமலை: தெலங்கானா மாநிலம் சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம் வழியாக சென்றது. லிங்காலே அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று முன்னேரு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இதைபார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே லாரியில் சிக்கியிருந்த டிரைவரை பத்திரமாக மீட்டனர். இதில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த லிங்காலே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை, கிரேன் மூலம் மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement