லாரியை வழிமறித்த காட்டு யானை
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வன கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.
Advertisement
இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் நோக்கி லாரி ஒன்று சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானை சரக்கு லாரியை வழிமறித்து கரும்புகள் உள்ளதா? என தும்பிக்கையால் தேடியது. அப்போது லாரியை டிரைவர் மெதுவாக நகர்த்தி யானையிடமிருந்து தப்பினார்.
Advertisement