தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி- லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல்

*2 பேர் படுகாயம்

Advertisement

செங்கம் : செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று காலை லாரி சென்றது. முறையாறு அருகே திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து டிஜிட்டல் பேனர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில், லோடு ஆட்டோ நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மற்றும் தர்மா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களுடன் சேர்ந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர தேடி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையாக மாற்ற மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில், குறிப்பாக செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை குறுகிய இருவழிச்சாலையாக இருப்பதுதான் காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News