மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
டெல்லி: கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கிய மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் ஒரு மாதம் நடந்த கூட்டத்தொடர் முடங்கி போனது. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தை தவிர மக்களவையில் வேறு அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.
Advertisement
Advertisement