அனைவரும் புரிந்து கொள்ள உள்ளூர் மொழியை பயன்படுத்த வேண்டும்: நீதித்துறைக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி வழங்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும் போது, ‘நீதி என்பது சமூக நீதியை உறுதி செய்வதற்கான முன்னோடி. நீதியின் தீர்ப்புகள் மற்றும் சட்ட ஆவணங்களை உள்ளூர் மொழிகளில் கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி, அதை பெறுநருக்குப் புரியும் மொழியில் வழங்கப்பட வேண்டும். சட்டங்களை உருவாக்கும் போது இந்தக் கொள்கையை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றார். தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் பேசுகையில்,’ நீதி என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, ஒவ்வொரு குடிமகனின் உரிமை. சமூகத்தின் ஓரத்தில் நிற்கும் கடைசி நபரைக் கூட நீதியின் ஒளி சென்றடைவதை உறுதி செய்வது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கடமை’ என்று வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement