அமராவதி: மதுபான ஊழலில் சிக்கிய ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பியை மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.3200 கோடி மதுபான ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கடப்பா எம்பி மிதுன் ரெட்டியிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். காலையில் இருந்து பல மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் பின் மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டார்.