மது விற்பனை செய்த ரெஸ்ட்டாரண்டுக்கு சீல்
Advertisement
இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், விஏஓ தினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு அந்த தனியார் ரெஸ்ட்டாரண்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த தனியார் ரெஸ்ட்டாரண்ட் நிர்வாகம் முறையாக லைசென்ஸ் வாங்காமல் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தாசில்தார் ராதா முன்னிலையில் வருவாய்த்துறையினர் அந்த ரெஸ்ட்டாரண்டின் கதவுகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.
Advertisement