நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காதல் விவகாரம்: பத்திரப் பதிவுத்துறையில் இருதரப்பு மோதல்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் பத்திரப் பதிவுத்துறையில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இசைக்க பாண்டியன் இவர் ஆசிரியராக உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் காதலித்த பெண்ணை லண்டனில் இருந்து வரவைத்து கோயம்பத்தூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக பெரும் செய்தி பரபரப்பாக வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய கோயம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதியில் முயற்சி செய்யபோது எந்த பகுதிகளிலும் அவர்களுக்கான அந்த அனுமதி கிடைக்காத நிலையில், அவர்கள் சொந்த ஊரான பாளையங்கோட்டையில் திருமணத்தை பதிவு செய்வதுக்காக வந்து இருக்கின்றனர். அப்போது மணமகன் மற்றும் மணமகள் கிட்ட இருதரப்பு சேர்ந்த குடும்பத்தினரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஒருவர் ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டார்கள்.
இதில் மூன்று பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணமகன் மற்றும் மணமகள் காவல் நிலையத்தில் அழைத்து சென்று இருக்கிறார்கள். தொடர்ந்து இருதரப்பு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் வரவைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த காரணத்தினால் பாளையங்கோட்டை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இருதரப்பு சேர்ந்த குடும்பத்தினரும் அப்பகுதியில் குவிந்து இருப்பதாக ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட மூன்று பெரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில், திருமணம் செய்த பெண் மற்றும் மணமகன் இருவரையும் பேச்சு வார்த்தையை காவல் துறையினர் நடத்தி வருகிறார்கள்.