வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம் மீண்டும் கூண்டுக்கு திரும்பியது: வண்டலூர் உயிரியில் பூங்கா அதிகாரிகள் தகவல்
சென்னை :சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி பகுதியில் புதிதாக உலாவ விடபட்ட சிங்கம் ஒன்று கடந்த மூன்று தினங்களாக உணவு அருந்தும் இடத்திற்கு வராமல் மயமானது.
இதை தொடர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் தெர்மல் கேமராக்கள் மூலமாக இந்த சிங்கதை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அது மட்டும் இன்றி உயிரியில் பூங்காவின் பணியாளர்களும் 25 ஏக்கர் பரப்பளவில் அந்த சிங்கம் உலவிடப்பட்ட பகுதி முழுவதுமாக ஆய்வினை மேற்கொண்டுவந்தனர்.
இதில் 25 ஏக்கர் பரப்பளவில் சுற்றுவட்டார பகுதியில் அந்த சிங்கத்தின் நடமாட்டம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் சிங்கத்தை தீவீரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்தனர். இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக இந்த சிங்கம் உணவு அருந்தும் இடத்திற்கு வராததால் ஊழியரிடம் பரபரப்பு நேர்ந்து வந்தது.
மேலும் இந்த சிங்கத்தை தேடுவதற்காக ஜேசிபி எந்திரங்கள் மூலமாக புதர்களில் தேடி வந்தனர். அதனை தொடர்ந்து இன்று மாலையில் அந்த சிங்கம் ட்ரோன் கேமராவில் தென்பட்டது. அதனை தொடர்ந்து ட்ரோன் மூலமாக அந்த சிங்கத்தை தொடர்ந்து. கண்காணித்து வந்த பொழுது இந்த பகுதியில் தற்சமையம் இடி மின்னலுடன் மழை பெய்தது.
பெரிய இடி சத்தம் இந்த பகுதியில் கேட்டதை தொடர்ந்து. அந்த சிங்கம் ஒரு புதருக்குள் இறங்கி வெளியை வந்து வேகமாக உணவு அருந்த ஓடும் காட்சிகள் தற்போது ட்ரோனில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வண்டலூர் உயிரியில் பூங்கா அதிகாரிகள் சிங்கம் திரும்பி வந்துவிட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.