மின்னல் தாக்கி சகோதரிகள் பலி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரது மகள்கள் செய்யது ஆஸ்பியா பானு(13), சபிக்கா பானு(9). 9ம் வகுப்பு, 5ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நேற்று மதியம் வீட்டின் அருகே வயல்வெளியில் வேப்ப மரத்தின் கீழ் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் இரு மகள்களையும் இழந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
Advertisement
Advertisement