வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கி கண்டெடுப்பு
சேலம்: வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிலப் பிரச்சனை காரணமாக திமுக நிர்வாகி ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.கண்டெடுக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கி யாருடையது என போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement