பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.84.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அதேபோல, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்புதூர் உள்பட தமிழக ம் முழுவதும் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 32 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்தர மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.