விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆழ்ந்த அறிவும், தெளிவான சிந்தனையும் கொண்டவர் திருமாவளவன். உழைக்கும் மக்கள் நலன்காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து என தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.