சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்: மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கருத்து
சென்னை: மசோதா மீதான ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநருக்கு எந்த கால நிர்ணயமும் இல்லை என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி பி.வில்சன், ‘‘ உச்ச நீதிமன்றம் வழங்கியதை தீர்ப்பு என சொல்ல முடியாது. கருத்து என்று மட்டுமே குறிப்பிட்டு சொல்லியுள்ளனர். கவர்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதா மீது முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிப்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதா மீது 3 மாதத்தில் ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்’’ என்றார்.
Advertisement
Advertisement