அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். காசாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டுமெனக்கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கி.வீரமணி, வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், ஜவாஹிருல்லா, மு.வீரபாண்டியன், பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலை உலக மக்களின் மனதை உலுக்குகிறது. காசா வில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. காசா வில் ஓராண்டில் பெரும் பகுதி அழிந்துவிட்டது.
மனிதநேய பண்போடு ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பன்னாட்டு சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சட்டங்களையும் இஸ்ரேல் மீறியுள்ளது. உணவுப்பொருள் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.காசாவில் நிகழும் இனப்படுகொலையை மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவளிக்கிறது. காசா வில் நடைபெறும் இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்
அக்.14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். காசா படுகொலையை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று கூறினார்.