சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன? ஜன. 9ம் தேதி வரை வெயிட் பண்ணுங்க: சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்பதை மட்டும் தான் நாங்கள் உங்களுக்கு சொல்லனும். இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டிங்க. இன்னும் ஜனவரி 9ம் தேதி வரை நீங்கள் வெயிட் பண்ண வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்பது எல்லாம் இலக்கு இல்லை. எங்களை பொறுத்தவரை 234 தொகுதிகளும் இலக்கு தான்.
சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. எல்லாரும் தோழமை கட்சிகள் தான். அதை வைத்து கூட்டணி என்று சொல்ல முடியாது. கூட்டணி என்பதை தவிர, எல்லாருமே எங்கள் தோழமை கட்சி தான். எல்லா கட்சிகளுமே எங்களுக்கு நட்பு தான். தோழமை தான். ஆனால், உரிய நேரத்தில் உங்களுக்கு பதில் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.