சட்ட பேரவை தேர்தல் பாஜ பொறுப்பாளர்கள் நியமனம்
புதுடெல்லி: பீகார் சட்ட பேரவை தேர்தல் பாஜ பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அடுத்தாண்டு நடக்க உள்ள மேற்கு வங்க தேர்தலையொட்டி மாநில பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ்,இணை பொறுப்பாளராக முன்னாள் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
பீகார் பேரவை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளர்களாக ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உபி துணை முதல்வர் கே.பி.மவுர்யா நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் தமிழ்நாடு பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளராக கட்சியின் துணை தலைவரும் எம்பியுமான பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement