சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட டிச.14 முதல் விருப்பமனு: அன்புமணி அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது. சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனு சமர்ப்பிக்கலாம். வரக்கூடிய சட்டமன்ற பொது தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் பிரதாமான இருக்கக்கூடிய கட்சிகளும் விருப்பமனு வழங்குவதற்கான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் பாமக சார்பில் விருப்பமனு அளிப்பவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என பாமகவின் தலைவர் அன்புமணி ராம்தாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கின்றனர். இந்த தேர்தகளில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவார்கள் வரக்கூடிய 14 ஆம் தேதி முதல் இந்த மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களில் இருக்கக்கூடிய விவரங்களை முழுமையாக நிரப்பி தலைமை நிர்வாகி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கட்சியின் தலைவர் அன்புமணி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் பாமக சார்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனம் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவுபெற கூடிய நிலையில், தொடர்ந்து கட்சிக்குள் இரண்டு பிரிவாக பிளைவு ஏற்பட்டு இரண்டு பல்வேறு சச்சரவுகளும், சண்டைகளும் தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில், தேர்தலில் பாமகவின் மாம்பழம் சின்னம் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது. யார் அதிகாரப்பூர்வமாக பாமக வேட்பாளர் என்பதும் ஒரு கேள்வி குறியாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விருப்பமனு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே உரிமை நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பு முறையிட்டு இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தான் வரக்கூடிய தேர்தலில் பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.