லெஜண்ட்ஸ் டி20; டிவில்லியர்ஸ் விஸ்வரூபம் தெ.ஆப்ரிக்கா சாம்பியன்
துவக்க வீரர் ஹாஸிம் ஆம்லா 18 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 120 ரன்களை வேட்டையாடினார். 16.5 ஓவரில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 197 ரன் குவித்து வெற்றி வாகை சூடியது. அதனால், சாம்பியன் பட்டத்தையும் அந்த அணி அநாயாசமாக கைப்பற்றியது.