தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ். அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க... போதை போலீஸ்காரர் வீடியோ வைரல்

Advertisement

திருப்பூர்: லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா ஆப்சென்ட் போட்டுட்டாங்க என போதையில் போலீஸ்காரர் பேசும் வீடியோ திருப்பூரில் வைரலாகி வருகிறது. திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் முத்துசாமி. இவர், தன் முன்னால் மதுபாட்டில்கள் சிகரெட் பெட்டி, தண்ணீர் பாட்டில்கள் வைத்துக்கொண்டுபோதையில் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது: நான், நேற்று டூட்டியில் இருக்கும்போது ஒரு 100 கால் அட்டன் செய்து அந்த பிரச்னையை சரி செய்தேன். இப்போது என் மனைவியை காணவில்லை, அதனால் மது அருந்தி கொண்டுள்ளேன். என் மகள் நன்றாக படித்து மெடல் வாங்கியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னேன்.

லீவு லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா எதுக்கு ஆப்சென்ட் போட்டாங்கனு எனக்கு தெரியலை ஐயா. நேரா போய் ஜே.எம்.4 பார்க்க போகிறேன். அவர பார்க்கவா; இல்ல எங்க ஏரியா கவுன்சிலர பார்க்கவா; என நீங்களே சொல்லுங்க ஐயா... இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார். மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு எனது மனைவி, மகள்கள் கிடைத்துவிட்டார்கள் எனவும், எனது மனைவியை கோபத்தில் அடித்துவிடுவேன் என்பதற்காக என் அத்தை என் வீட்டில் உள்ளார்கள் எனவும் பேசியதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது, திருப்பூர் காவல் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement