தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலைக்கட்சியைப் பற்றி கட்சி பிரமுகர்களே சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

டீக்கடையில் சூடாக காபி குடித்தபடியே, பக்கத்தில் பஜ்ஜியை ருசித்துக்கொண்டிருந்த விக்கியானந்தாவிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘கடைசி நேரத்தில் ஜாக்பாட் அடிக்கும் கட்சிக்கு தாவ முடிவெடுத்து இருப்பதால் எந்த கட்சிக்கும் பிடி கொடுக்காமல் புதுச்சேரியில் மாஜிக்கள் நழுவி விடுறாங்களாமே..’’ என்று கேட்டார்.

Advertisement

‘‘புதுப்புது அரசியல் கூத்துகள் அரங்கேறும் புதுச்சேரியில் தேர்தல் ஜூரம் தொடங்கி விட்டதாம்.. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், தோற்றவர்கள் மட்டுமின்றி புதிதாக களம் காண விரும்புகிறவர்களும் மக்களை சந்திக்க தொடங்கி விட்டார்களாம்.. கட்சி சின்னத்தை கடந்து, சொந்த செல்வாக்கால் 6 பேர் கடந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றியை ருசித்ததுதான முக்கிய காரணமாம்.. தற்போது இடஒதுக்கீடு சலுகை அமலில் உள்ளதால் வரும் தேர்தலில் கூடுதலாக மகளிர் களமிறங்க தயாராகி வருகிறார்களாம்.. இதற்காக ஒவ்வொரு கட்சியிலும் செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள், தங்களது மனைவிகளை களப் பணிகளில் முன்னிறுத்தி வருகிறார்களாம்.. சில மாஜிக்கள் எந்த கட்சியிலும் பிடிகொடுக்காமல் நழுவி வருவதோடு கடைசி நேரத்தில் ஜாக்பாட் அடிக்கும் கட்சிக்கு தாவ முடிவெடுத்து இருக்கிறார்களாம்.. கொள்கை, கோட்பாடு எல்லாம் அந்தகாலம்... ‘பவிட்டமின்’தான் இந்த காலம்... என பிரபல லாட்டரி அதிபரிடமும் சில கட்சிகளின் விஐபிக்கள் ரகசிய தொடர்பில் உள்ளார்களாம்.. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளருக்கு பஞ்சமிருக்காது என்ற பேச்சு உலாவுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கைகாட்டினாலும் ஸ்டாப்பிங்ல நிற்காம செல்லும் பஸ்களால மகளிர் ரொம்பவே புலம்புறாங்களாமே எங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஒவ்வொரு நாளும் முதல்வர் தொடங்கி வைக்கிறாரு.. இதுல மகளிர் உரிமை தொகை, மகளிரின் விடியல் பயணம் திட்டம்னு ஏராளமான திட்டங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.. வேலைக்கு செல்லும் பெண்கள்ல இருந்து அனைத்து பெண்களும் அரசு பஸ்கள்ல இலவச பயணம் செய்றாங்க.. இதனால தினமும் மகளிர், தமிழக முதல்வரை பாராட்டி வர்றாங்க.. ஆனா, வெயிலூர் மற்றும் வெயிலூர் மாவட்டத்துல பல இடங்கள்ல அரசு பஸ்களை இயக்கும் சில டிரைவருங்க, பஸ்களை ஸ்டாப்பிங்ல நிறுத்துறதே இல்லையாம்.. மகளிர் கை காட்டி நிறுத்த சொன்னாலும் நிறுத்தறதில்லையாம்.. இது எல்லாத்துக்கும் சாட்சி அந்தந்த ஸ்டாப்பிங்ல காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் தான் என்று ஜனங்க புலம்பி வர்றாங்க.. ஒரு சிலர் செய்ற தவறால, அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு வருது.. இதனை தீவிரமாக கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு ஜனங்க அதிகாரிகளை திட்டி தீர்க்குறாங்க.. இனியாவது துறை சார்ந்த அதிகாரிங்க உரிய நடவடிக்கை எடுக்கணும்ற கோரிக்கையும் எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியைப் பற்றி அக்கட்சிக்காரங்களே சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சிப்பதுதான் இப்ப டிரெண்டு போல..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைக்கோடி மாவட்ட இலைக்கட்சியில் தற்போது சமூக வலைதளத்தில் கட்சி நிர்வாகிகள் சிலரை பற்றி, அவுங்க கட்சிக்காரங்களே தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்களாம்.. இப்படி விமர்சன பதிவு போடுவதில் கிழக்கு மாவட்ட பகுதியை சேர்ந்த ரெண்டு பேர், முன்னணியில் இருக்கிறாங்களாம்.. இவர்கள் ரெண்டு பேருமே மாற்று முகாம்களில் இருந்து இலை கட்சிக்குள் வரவழைக்கப்பட்டவர்களாம்.. ஒருத்தரு, தேனிக்காரர் ஆதரவாக இருந்தவர்.. மற்றொருவர் குக்கர் கட்சியில் இருந்தவரு.. இவுங்க ரெண்டு பேரும் இணைந்த பிறகு பெரிசாக இலை கட்சிக்காரங்க கண்டுக்கவில்லையாம்.. எப்படியும் பொறுப்பு வந்துரும் என எதிர்பார்த்து இருந்தவங்களுக்கு இப்போது வரைக்கும் ஏமாற்றம் தான் கிடைச்சிருக்காம்.. இதற்கெல்லாம் சேலத்துக்காரர் கிட்ட அதிகமாக நெருக்கமாக இருக்கும் அந்த முக்கிய புள்ளிதான் காரணம் என நினைத்து தற்போது சமூக வலைதளத்துல, அந்த முக்கிய புள்ளி பற்றியும் வசை பாட தொடங்கி இருக்கிறார்களாம்.. இவுங்க ரெண்டு பேருல ஒருத்தரு, ஏற்கனவே போஸ்டர் மேல் போஸ்டர் அடிச்சி சேலத்துக்காரரை ரொம்பவே புகழ்ந்தாராம்.. இதுவரைக்கும் 10க்கு மேற்பட்ட போஸ்டர் வகைகள் அடிச்சும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் இப்போது சமூக வலைதளத்துல வறுத்தெடுக்கிறாராம்.. சமூக வலைதளத்துல கட்சியை கேவலப்படுத்தும் நபர்கள் பற்றி புகார் அளிக்க இலை கட்சி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மாவட்ட காக்கி உயர் அதிகாரியை பார்த்து புகார் மனு கொடுத்து இருக்கிறாங்க.. புகார் மனுவுல எதிர்மனுதாரர்கள் பெயரே இல்லையாம்.. இது பற்றி காக்கி உயர் அதிகாரி கேட்க, என்ன செய்ய எங்க கட்சிக்காரங்களே எங்க கட்சியை பற்றி மோசமாக சமூக வலைதளத்துல பதிவை போட்டுகிட்டு இருக்காங்க என வேதனையுடன் கூறிட்டு வந்தாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடலோர மாவட்டத்தில் ஒரு தொகுதியை கைப்பற்றுவதில் மலராத கட்சி விடாப்பிடியாக இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் மரியாதையாக துவங்கும் தொகுதியை என்ன பாடுபட்டாவது கூட்டணியில் பேசி கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மலராத கட்சியினர் ெராம்பவே தீவிரமாக இருக்காங்களாம்.. காரணம், இந்த தொகுதியை மலராத கட்சியை சேர்ந்த சில மாநில நிர்வாகிகள் குறிவைத்துள்ளனராம்.. இதற்காக, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், குறிப்பாக தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பதவிகளிலும் விடுதல் இன்றி உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டுமென தலைமை உத்தரவிட்டு இருக்காம்.. இதனால், இந்த மாவட்டத்தில் இந்த தொகுதி கூட்டணியில் மலராத கட்சிக்கு தான் என இப்போதே பரவலாக பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறதாம்.. புதிய நிர்வாகிகள் நியமனம் என்ற பெயரில் கட்சியில் நீண்டகாலமாக இருந்தவர்களை புறக்கணித்துவிட்டு, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறதாம்.. இது கட்சிக்குள் ரொம்பவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இது ஒருபுறம் இருக்க, மரியாதை தொகுதியை மலராத கட்சிக்குக் கொடுக்கக்கூடாது என்று உள்ளூர் இலைகள் தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement