தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலைக்கட்சி கூட்டணியில் ஆப்பசைத்த கதையா இருக்கும் குக்கர்காரர் கதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் அதிகம் கூட்டத்தை காட்ட அழைச்சிட்டு வந்துட்டு வெறும் இருநூறு ரூபாயை கொடுத்து ஏமாத்திட்டதா பெண்கள் முனங்கிக் கிட்டே போனாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
Advertisement

‘‘கடலோர மாவட்டத்தில் சமீபத்துல மலராத கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துல மாநில தலைவர் கலந்துகொள்வதால் பெண்கள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தலைக்கு ரூ.250 பேசி அழைத்து வந்தாங்களாம்.. ஆனால் ஆர்ப்பாட்டம் முடிஞ்சதும் கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு தலைக்கு இருநூறு மட்டுமே கொடுக்கப்பட்டதாம்.. இதை பார்த்தவுடன் ‘உங்க கூட்டணியில் உள்ள சேலத்துக்காரர் பிரசாரத்திற்கு வந்தபோது தலைக்கு முன்னூறு கொடுத்தாங்க.. நீங்க 250 ரூபாய் பேசிவிட்டு இருநூறு மட்டுமே தர்றீங்க.. இது கூட்டணி தர்மம் இல்லை..’’ என பெண்கள் முனங்கிக் கொண்டே சென்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மகனின் நடைபயணத்திற்கு தடைபோடுவதில் பிடிவாதமாக இருக்கும் தந்தை ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கட்சியில் தந்தை, மகன் உரசலுக்கு ஐந்து மாதமாகியும் விடிவு இல்லையாம்.. தேர்தல் நெருங்குவதால் விரிசல் மேலும் மேலும் அதிகரித்தபடியே தான் இருக்காம்.. ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார்ன்னு தெரியும்.. என நிறுவனர் தடாலடி காட்டி மகனின் நடைபயணத்துக்கும் தடைபோட காக்கி மேலிடத்தை நாடினாராம்.. அது தோல்வியில் முடிய, அப்செட்டில் உள்ளாராம்.. இதனால் நிறுவனரின் பிறந்தநாள்கூட தைலாபுரத்தில் எதிர்பார்த்தபடி களைகட்ட வில்லையாம்.. நிலைமை இப்படியிருக்க, மகனின் பயணத்துக்கு எப்படியாவது தடைபோட வேண்டுமென்பதில் நிறுவனர் பிடிவாதமாக இருக்கிறாராம்.. இதனால் உள்துறை செயலரை சந்திக்க தனது உதவியாளரான நாதனை முடுக்கி விட்டாராம்.. அவரும் ரெண்டு தினங்களுக்கு முன்பு மெட்ராஸ் சென்று திரும்பினாராம்.. எந்தவித பதிலும் கிடைக்காத நிலையிலும் தந்தை மிகுந்த நம்பிக்கையில் உள்ளாராம்.. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் களத்தை தெறிக்கவிட்டு வருகிறாராம் அன்பின் மணியானவர்.. இதனால் கட்சியின் சின்னம் அதோ கதியாகி விடுமோ என்ற அச்சம் மாங்கனி கட்சியினரிடம் ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியில இறந்து போனவர்களுக்கு கட்சி பொறுப்புக்கு பரிந்துரைத்த விவகாரம் தான் இப்ப ஒரே பேச்சா இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் சுற்றுலா தலமான தீவு நகர இலைக்கட்சியில், மகாபாரதத்தோடு தொடர்புடையவரின் பெயரைக் கொண்டவர் பொறுப்பில் உள்ளாராம்.. இவரது செயல்பாடுகள் கடந்த 4 ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையாம்.. குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்களிடமும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாக ஏற்கனவே புகார்கள் இருக்காம்.. தற்போது கட்சியினர் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவரும் நிலையில், இவரை உடனடியாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை கட்சியினர் முன்னெடுத்து இருக்காங்களாம்.. இல்லாவிட்டால் தீவு நகரத்தில் கட்சியே இல்லை என்று கூறும் நிலை வந்துவிடும் என கட்சி முக்கிய நிர்வாகிகள் தலைமைக்கு புகார்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்காங்களாம்.. சுதாரித்த ‘நகரம்’ உடனடியாக கட்சி கிளைகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையை துரிதப்படுத்தியுள்ளாராம்.. இதுதொடர்பாக ஒரு பட்டியலையும் பரிந்துரைத்துள்ளாராம்.. இதில், என்ன சுவாரஸ்யம் என்றால், இறந்துபோன சிலருக்கு கட்சி பதவி கொடுக்க பரிந்துரைத்துள்ளதுதான் உச்சக்கட்ட காமெடி.. அந்தளவுக்கு கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கமாக உள்ளார் என்று இலைக்கட்சியினரே விமர்சிக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தே.ஜ. கூட்டணியில் தான் இருக்கிறோம் என சொன்ன குக்கர்காரர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டாரே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி கூட்டணியில் ஆப்பசைத்த கதையாக இருக்குதாமே குக்கர்காரர் கதை..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியை நம்பி நட்டாற்றில் இருக்கும் தேனிக்காரருக்கு உலகமே இருட்டாகவே இருக்குதாம்.. மம்மிக்கு ஜெயில் தண்டனை கிடைத்தபோது விசுவாசியாக கண்ணுக்கு தெரிந்தவர் இந்த தேனிக்காரர். இதன் காரணமாக லட்டுபோல முதல்மந்திரி பதவி கிடைச்சது.. இவ்வாறு மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அவருக்கு மலராத கட்சியோட கூட்டணி சேர்ந்ததால் கரைவேட்டி கூட கட்டமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது.. என்றாலும் ஆசைகாட்டி அவரை தங்கள் பக்கம் இழுத்து வச்சிருந்தாங்க.. இதனால் கோபமாக இருந்த இலைக்கட்சி தலைவர், கூட்டணியிலிருந்து வெளியே வந்துட்டாரு.. இதனால உக்கிரமான மலராத கட்சி, தேனிக்காரரை முற்றிலும் ஒழித்துவிட திட்டமிட்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான தேனியை விட்டு, அறிமுகம் இல்லாத ராமநாதபுரத்தில் போட்டியிட வைச்சாங்களாம்.. இதில் குக்கர்காரரையும் ஒழிக்கணும், அதே நேரத்தில் தேனிக்காரரையும் முடிக்கணும் என்பதுதான் அவர்களின் குறியா இருந்துச்சாம்.. அதன்படியே அவர்கள் ரெண்டுபேரையும் தோல்வியை தழுவ வச்சிட்டாங்களாம்.. ஆனால் இதில் தேனிக்காரரை ஒழித்த கதையே வேறுவிதமாக இருந்துச்சாம்.. தேர்தலில் போட்டியிட மறுத்த அவரை கட்டாயப்படுத்தி ராமநாதபுரத்தில் நிறுத்தினாங்களாம்.. இலைக்கட்சியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வான ஒருவர், சுயேச்சையாக வேட்புனு தாக்கல் செய்தாலே அவரை தேர்ந்தெடுத்த கட்சியில் இருந்து விலகியதாகத்தான் அர்த்தமாம்.. அதன்படியே அவர் தாமாகவே முன்வந்து இலைக்கட்சியில் இருந்து விலகி விட்டதால், அவர் இலைக்கட்சி மீது சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் கிடையாதாம்.. இலைக்கட்சி தொடர்பாக அவர் தொடர்ந்துள்ள 4 வழக்குகளும் தானாகவே ரத்தாகி விடுமாம்.. இதில் ரொம்பவே ஹேப்பியாக இருப்பது இலைக்கட்சி தலைவர்தானாம்.. இலைக்கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க நினைத்து அதில் வெற்றியும் கண்டது மலராத கட்சி தானாம்.. மேலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் மேல்சபை எம்பியாக்கி, உங்களை மத்திய மந்திரியாக்குவோமுன்னு சொன்னதை நம்பி கூட்டணியில் இருந்தும் கழட்டி விட்டுட்டாங்களேன்னு தேனிக்காரரின் அடிபொடிகள் தலையில் அடித்து கண் கலங்குறாங்களாம்.. இதற்கிடையில் கூட்டணியில் சேர்க்க மறுத்ததால் தேனிக்காரர் எந்தபக்கம் போவது என்று தெரியாமல் விழிபிதுங்கி போயிருக்காராம்.. சின்ன மம்மியையும், தேனிக்காரரையும் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்ட நிலையில் ஒரே சமூகமான குக்கர்காரருக்கு மட்டும் இலைக்கட்சி கூட்டணியில் என்ன வேலை என்ற கேள்வி மதுரை சுற்றுவட்டாரத்தில் எழுந்திருக்காம்.. இதனால ஆப்பசைத்த கதையாக இருக்குதாம் குக்கர்காரர் கதை..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement

Related News