தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலைக்கட்சி-மலராத கட்சி கூட்டணியால் சென்டிமென்ட் தொகுதியை குறி வைத்துள்ள குக்கர்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

Advertisement

‘‘பதிவு ஆபிஸ் புரோக்கர் பிடியில சிக்கிக்கொண்டதாக சொல்றாங்களாமே எந்த ஊர்ல தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல கலெக்டர் ஆபிஸ் பக்கத்துல இரட்டை மலைன்னு தொடங்குற பகுதியில மிஸ்டர் பத்தூர் நகரத்துக்கு பதிவு அலுவலகம் இயங்கி வருது.. இந்த பதிவு அலுவலகத்துல இருந்த அதிகாரி ஆறு மாசத்துக்கு முன்னாடி மாறுதல் பெற்று சென்னைக்கு சென்றுவிட்டாராம்.. அப்புறம் இன்னொரு அதிகாரிய பதிவு அலுவலராக நியமிச்சிருக்காங்க.. அவர் மேல புகார்கள் அதிகமாக வந்துச்சாம்..

அதனால அவரை தலையாட்டி பொம்மை ஊருக்கு அனுப்பி வெச்சிட்டாங்களாம்.. அவருக்கு அப்புறமாக 4 எழுத்து பெயர் கொண்ட அதிகாரிய நியமிச்சாங்களாம்.. இப்ப, பதிவு அலுவலகமே யார் கன்ட்ரோல்ல இருக்குதுன்னு தெரியாத நிலைக்கு போய்விட்டதாம்.. புரோக்கர் பிடியில சிக்கிட்டதாக சொல்றாங்க.. புரோக்கர்ஸ் கிட்ட போனாதான் எல்லா பதிவும் நல்லா நடக்குதாம்.. இதனால், பதிவு ஆபிஸ்ல இருந்து புகார்கள் வந்துகிட்டு இருக்குது.. உயர் அதிகாரிங்க உண்மை என்னன்னு விசாரிச்சு அப்புறம் நடவடிக்கை எடுக்கணும்னு ஜனங்க எதிர்பார்க்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூலவருக்கு தங்க அங்கி காணிக்கையாக சாத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி விசாரணை வரை சென்றுவிட்டதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல மும்மூர்த்திகள் உள்ள ஆலயத்தில், மூலவருக்கு தங்க அங்கி காணிக்கையாக வந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறதாம்.. வழக்கமாக தங்கம், வெள்ளியில் பெரிய அளவில் காணிக்கை கொடுப்பவர்கள், முறைப்படி கோயில் அலுவலகத்துல தகவல் கூறி, ரசீது பெற்று அதன் பின்னர்தான் காணிக்கையாக கொடுப்பாங்களாம்..

ஆனால், இங்கு மூலவருக்கான தங்க அங்கி, அறநிலையத்துறை அலுவலக அதிகாரிகளின் கவனத்துக்கே வராமல் சாத்தப்பட்டு இருக்கிறதாம்.. கோயில் பட்டர் ஒருவரே நேரடியாக சென்னையில் உள்ள ஒரு கடையில ஒன்றே கால் லட்சத்துக்கு தங்க தகட்டில் அங்கி செய்து, கொண்டு வந்து மும்மூர்த்திகளின் மூலஸ்தானத்தில் சாத்தி உள்ளாராம்.. இது எதுவுமே கோயில் அலுவலக அதிகாரிகளுக்கு தெரியவில்லையாம்.. பக்தர்கள் விஷயம் தெரிஞ்சு கேட்ட பின் தான், அதிகாரிங்க விசாரணையில் இறங்கி இருக்காங்களாம்..

தங்க அங்கி கொண்டு வந்தது பிரச்னை இல்ல.. ஆனால் கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியாம எப்படி வந்துச்சு.. எவ்வளவு ெதாகைக்கு செய்யப்பட்டது, டோனர் யார், உண்மையிலேயே தங்கமா அல்லது முலாம் பூசப்பட்டதா என எந்த விவரமும் ஏன் சொல்லல என கூறி சம்பந்தப்பட்ட பட்டரிடம் அதிகாரிங்க விசாரணையை தொடங்கி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்தில் பெயர் இடம் பெறாததால் ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது, சேலத்துக்காரரை வரவேற்று பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்துச்சாம்.. இதில், மாஜி அமைச்சர் பெயர் இடம்பெறவில்லையாம்.. பிரசாரத்தின் போதும், மாஜி அமைச்சருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லையாம்.. இதனால் மாஜி அமைச்சர் கடும் விரக்தியில் இருந்து வருகிறாராம்.. தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என அவரது ஆதரவாளர்களிடம் புலம்பிக்கிட்டு இருக்கிறாராம்..

இது தெரிஞ்ச மற்றொரு மாஜி அமைச்சரான ‘மணியானவர்’ ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம்.. கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர்களுக்கு இடையே நடந்து வரும் பனிப்போர் தற்போது சேலத்துக்காரரின் சுற்றுப்பயணம் மூலமாக உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்.. இந்த டாப்பிக் தான் கட்சிக்குள்ளே அரசல் புரசலாக ஓடிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மறைந்த தலைவர்களின் தொகுதியில் போட்டியிட குறி வைத்துள்ள குக்கர்காரரை தடுத்து நிறுத்தும் பணியில் இலைக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இறங்கிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘பழைய பகை கண் முன்னே வந்து போனாலும், மலராத கட்சியோட இலைக்கட்சி கூட்டணி என்று கூறியதில் குக்கர்காரருக்கு ரொம்பவே சந்தோஷமாம்.. ஏனென்றால் ஹனிபீ மாவட்டத்தில் இலைக்கட்சியின் மறைந்த பெரும் தலைவர்கள் போட்டியிட்ட பட்டி என முடியும் தொகுதியின் மீது குக்கர்காரர் ஒரு கண் வைத்துள்ளாராம்..

மலராத கட்சியோட இலை இணை சேரும்போது, அது தனக்கு சாதகமாக அமையும்.. அனைத்து தரப்பு ஓட்டுக்களும் வந்து சேரும்போது எளிதில் வெற்றி பெற முடியும்.. சென்டிமென்டாக இந்த தொகுதியில் போட்டியிட்டால், அரசியலில் பெரிய ஆளாக வரலாம் என கணக்கு போட்டு வைத்துள்ளாராம்.. இந்த விவகாரம் தொகுதிக்குள் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இலைத்தரப்பினர் ரொம்பவே அப்செட் மனநிலைக்கு சென்றுள்ளனராம்..

இந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்ற கனவில், கடந்த முறை போட்டியிட்டு தோற்ற இலைக்கட்சியின் ஒன்றிய செயலாளரும், தற்போதைய மாவட்டச் செயலாளரும் சேலத்துக்காரரை அடிக்கடி சந்தித்து வருகின்றனராம்.. ஆனால், கடைசியில் கூட்டணி கட்சியான பவர்ஃபுல் குக்கர்காரர் இந்த தொகுதியை குறி வைத்துள்ளார் என்பது இருவருக்கும் மிகுந்த பின்னடைவை தந்துள்ளதாம்..

குக்கர்காரர் விரைவில் தேர்தல் பணியை துவங்க உள்ளதால், இதை எப்படியாவது முறியடித்து நம்ம கட்சி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற சென்டிமென்டை கூறி தடுத்து நிறுத்தும் பணியில் ஒன்றியமும், மாவட்டமும் தீவிரமாக உள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஜக்கு தரப்பின் தடாலடி பேச்சுக்களால் புதுச்சேரியில் ஆட்டம் கண்டுள்ளதாமே தாமரை தரப்பு..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் தாமரை தவியாய் தவிக்கிறதாம்.. 2021ல் அமைச்சரவையில் முதன்முதலாக சேர்ந்த தாமரை, 2026ல் தனியாக முதன்மை இருக்கையில் அமர தரைமறைவு வியூகங்கள் போட்டுள்ளதாம்.. ஆனால் தாமரையின் தமிழக அரசியல் விளையாட்டுகளை உன்னிப்பாக கவனித்து வரும் புல்லட்சாமியோ உஷாராகி வருகிறாராம்..

தாமரைக்கு செக் வைக்கும் வகையில் தனித்து ஆட்சியை பிடிக்கும் வகையில் கட்சியை பலப்படுத்த முன்னணி நிர்வாகிகளை உசுப்பேற்றி விட்டுள்ளாராம்.. இதன் பிரதிபலிப்ப தொகுதிகளில் காண முடிகிறதாம்.. சமீபத்தில் நகர பகுதியில் இளைஞர் பட்டாளங்களை திரட்டி சிட்டிங் பிரதிநிதி போட்ட கூட்டத்தில், கடந்தமுறை தாமரைக்கு ஓட்டு கேட்டதால் வாக்கு சரிந்தது. இந்த முறையோ நாம் ஜக்குக்கு வீடுவீடாக ஆதரவு திரட்டுவோம்..

என்ஆர் அய்யாவின் சாதனையை ஞாபகப்படுத்தினாலே போதும் என்றாராம்.. அப்போது அரங்கில் ஆரவாரத்துடன் கைதட்டல் எழுந்ததாம்.. தொடர்ந்து பேசிய புல்லட்சாமியும், 2026ல் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம். எனவே யாருக்கும் நாம் பயப்பட தேவையில்லை என்றாராம்.. ஜக்கு தரப்பின் தடாலடி பேச்சுக்களால் புதுச்சேரியில் ஆட்டம் கண்டுள்ளதாம் தாமரை தரப்பு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement