தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இலை கட்சி தலைவரின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் ஆபத்து வரப்போவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆய்வாளரையே புரோக்கரா செயல்பட மிரட்டல் விடுக்கப்பட்ட துணிகரம் காக்கி மேலிடத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் சமீபகாலமாகவே குற்றச்செயல்கள் அதிகரித்தபடி உள்ளதாம்.. புதுசா புதுசா விநோதமான சைபர் குற்றங்கள் ஒருபுறம் அரங்கேற, தற்போது ஒரு காவல் ஆய்வாளரையே புரோக்கராக செயல்பட மிரட்டல் விடுக்கப்பட்ட துணிகரம் நடந்துள்ளதாம்.. அதுவும் காவல் ஆய்வாளரின் அறைக்குள்ளே புகுந்து பேரத்தில் ஈடுபட, அதை நைசாக தனது செல்போனில் ஆய்வு ரெக்கார்டிங் செய்து உடனடி ஆக்‌ஷனில் இறங்கினாராம்.. அப்போது உங்களை மட்டுமல்ல... ஏற்கனவே அரசு அதிகாரிகள், பார் உரிமையாளர், ஏன் சில தனியார் மருத்துவமனை நிர்வாகத்தையே இதேபோன்று மிரட்டி பணம் பறித்துள்ளதாக அரசியல் பின்புலம் கொண்ட அந்த மிரட்டல் ஆசாமி உளறினாராம்.. அனைத்தும் ரெக்கார்டிங் ஆக, ஸ்டேஷன் நுழைவாயிலை மணிக்கணக்கில் பூட்டி வைத்து உடனடி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்.. இதற்கு துணை நின்ற அக்கட்சியின் உள்ளூர் தலைமைக்கு சல்லடை போடப்பட்டு உள்ளதாம்.. டிராபிக் துறையில் கண்காணிப்பாளரான அந்த செல்வமிக்கவர் மீதான பழைய குற்றச்சாட்டை மறைக்கவே இந்த ரகசிய பேரம் நடந்திருப்பதால், காக்கி மேலிடமே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறதாம்.. இதனால் ஆளும்தரப்பின் அடுத்தடுத்த ஆக்‌ஷன்.. ரியாக்‌ஷன்.. எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு உள்ளூர்வாசிகளிடம் பரவலாக எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை பார்ட்டி ஜெனரல் செக்ரட்டரி சுற்றுப்பயணத்துக்கு நாங்க ஏன் செலவு செய்யணும்னு ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல இலை பார்ட்டியோட ஜெனரல் செக்ரட்டரியாக இருக்குற சேலத்துக்கார் சுற்றுப்பயணம் செஞ்சி வர்றாரு.. விரைவில் வட மாவட்டமான வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர் பத்தூர் மாவட்டங்களுக்கு வரப்போறாரு.. அதுக்கு பார்ட்டி மெம்பர்ஸ்களோட மீட்டிங் ஆங்காங்கே நடந்து வருது.. ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, மாஜி மந்திரி வீரமானவரு தான் அனைத்தையும் கவனிச்சிக்கிட்டு வந்தாரு.. மாவட்டம் பிரிஞ்ச பின்னாடியும் கூட 3 மாவட்டங்கள்லயும் அவர் கை மட்டுமே ஓங்கி இருந்துச்சு.. அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிங்க இருந்தாலும் எல்லாம் பெயரளவுக்கு மட்டுமே டம்மியாக செயல்பட்டு வந்தாங்க.. தனக்கு ஒத்துப்போகிற ஓரிரு நிர்வாகிகளை தவிர மற்ற நிர்வாகிகளுக்கு எல்லாம் அவர் கல்தா கொடுத்து வந்தாரு.. இதனால் கடந்த ஆட்சிக்காலத்துல எங்களை சம்பாதிக்க விடாமல் ஒருத்தரே சம்பாதிச்சு வந்தாரு.. இப்ப, ஜெனரல் செக்ரட்டரி வரும்போது நாங்க எப்படி செலவு செய்ய முடியும்னு புலம்பினாங்களாம்.. அதோட, மாஜி மந்திரிதான் சுற்றுப்பயண செலவை பார்க்கணும்னு வெயிலூர், குயின்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கட்சி தலைமைக்கும் அழுத்தம் கொடுத்து வர்றாங்களாம்.. இதனால 3 மாவட்டங்களுக்கு சேர்த்து வீரமானவரை செலவு செய்ய சொல்லி தலைமை சொன்னதாக பேச்சு அடிபட்டுக்கிட்டு இருக்குது.. இதனால இலை பார்ட்டி நிர்வாகிகள் நிம்மதி அடைஞ்சிருக்காங்கன்னு பார்ட்டியில இருந்து பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் கூட ஆபத்து வரப்போகுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் ஆட்டம் அதிகமானதால், கட்சிக்குள்ளாறேயே பெரும் சுனாமி ஏற்பட போகுதாம்.. மம்மி மறைவுக்கு பிறகு இலைக்கட்சி ரெண்டா உடைந்துபோனதாம்.. அப்போது தேனிக்காரருக்கு கட்சியும், தற்போதைய இலைக்கட்சி தலைவருக்கு ஆட்சி எனவும் பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்களாம்.. ஆனால் அரசியலில் பழம்தின்னு கொட்டைப்போட்ட இலைக்கட்சி தலைவரோ, காய் நகர்த்தி கட்சியையும் தன்வசப்படுத்திக்கிட்டாராம்.. கடைசியில் கையை விரித்து பார்க்கும்போது தேனிக்காரரிடம் ஒண்ணுமில்லாமல் போச்சுதாம்.. இப்படியாக ஏமாந்துபோன தேனிக்காரர், கட்சி கரைவேட்டி கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுட்டாராம்..

அதே நேரத்தில் பல்வேறு வழக்குகளில் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் மாஜி கொங்கு மந்திரிகள், மலராத கட்சியுடன் கூட்டணி வச்சே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாங்களாம்.. அதோடு பிரிந்து கிடக்கும் தேனிக்காரர், சின்ன மம்மி, குக்கர்காரர் ஆகியோரை ஒருங்கிணைத்து மலராத கட்சியோடு சேர்ந்து, தனக்கு பிறகும் கட்சி இருக்குமுன்னு மறைந்த மம்மி சொன்னதை நிலைநிறுத்தணுமுன்னு நினைச்சாங்களாம்.. இதற்காக ஐந்து மாஜிக்கள் ஒருங்கிணைந்து போய் இலைக்கட்சி தலைவரை பார்த்து ஏமாந்துபோன சம்பவமும் நடந்துச்சாம்..

இதனால் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த மாஜியை களம் இறக்கியதை தெரிந்துகொண்ட இலைக்கட்சிக்காரர் மிரண்டுதான் போனாராம்.. இதன் பயனாக மலராத கட்சியோடு கூட்டணி வச்சிக்கிட்டாராம்.. ஆனால் அவரது நடவடிக்கை 5 மாஜி மந்திரிகளுக்கு பிடிக்கலையாம்.. தேனிக்காரர் கூட்டணியில் இருந்து வெளியே போனதால் ரொம்பவே அமைதியாகிட்டாங்களாம்.. விரைவில் இவர்கள் அனைவரும் போர்க்கொடி தூக்கவும் வாய்ப்பு இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இவர்களுடன் மலராத கட்சியின் டெல்லியும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுது.. தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக கூறிக்கொண்டு ஊர் சுற்றிவரட்டும்.. ஆனால் அனைவரும் ஒருங்கிணையாவிட்டால் தோல்வியை தடுக்கவே முடியாது.. ஆனால் மீண்டும் இலைக்கட்சி தலைவர் எதிர்கட்சி தலைவராகிவிடலாம் என்ற திட்டத்தில் இருக்காரு.. இப்படி ஒரு நிலை கண்டிப்பாக வரும்.. அப்போது கொங்கு பகுதியை சேர்ந்த மாஜி மந்திரி ஒருவரை எதிர்கட்சி தலைவராக்கி விட்டு, இலைக்கட்சி தலைவரை கழற்றி விடவும் முடிவு செஞ்சி யிருப்பதாக கட்சிக்காரங்க அடிச்சி சொல்றாங்க.. அமைதியாக இருக்கும் கடல் திடீரென சுனாமியாக மாறுவது போல, இந்த கொங்கு மாஜிக்களும் சுனாமியாக சுழற்று அடிப்பார்கள் என்றும் ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.