தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலை கட்சி தலைவருக்கு எதிராக கோபிக்காரர் மூலம் சின்னமம்மி கொடுக்கும் குடைச்சலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்டா இலை கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாமே?’’ என்று கேள்வியை ஆரம்பித்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘மலராத தாமரையில் இருந்து குக்கர் கட்சி விலகியதால் டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்களாம்... ஒருவேளை குக்கர் கட்சி தாமரையுடன் கூட்டணியில் இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டு குக்கர் கட்சி தலைமையானவர் தாமரை மேலிடத்தில் அடம் பிடிப்பார். தற்போது, அந்த பிரச்னை இல்லை என முக்கிய நிர்வாகிகள் ஜாலியாக இருக்காங்களாம்... இந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக தெரிவித்தால் வரும் காலங்களில் பிரச்னை வந்து விடும் என வெளியே சொல்லாமல், மவுனமாக டெல்டா மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கொண்டாடி வருகிறார்களாம்... தாமரையுடன் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு, தன்னை பற்றி இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யாராவது பேசுகிறார்களா? என்பது குறித்து குக்கர் கட்சி டீம் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை ரகசியமாக கண்காணித்து வருகிறதாம்’’ என்று பதிலளித்தார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி தலைவருக்கு எதிராக கோபிக்காரர் மூலம் சின்னமம்மி குடைச்சல் கொடுக்குறாங்களாமே?’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சியின் மம்மி மறைவுக்கு பிறகு கூவத்தூரில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்த நேரத்தில் பட்டியலில் இருந்தவர் தான் இந்த கோபிச்செட்டிப்பாளையத்துக்காரராம். அவரால் எம்எல்ஏக்களுக்கு ஒரு கிலோ தங்கமும், தலா 3 கோடி பணமும் கொடுக்க முடியாமல் போனதாம். தன்னால் முடியும் என மார்தட்டியிருக்கிறார் தலைவர், அதன்படி ரெண்டே நாளில் அனைவரின் வீட்டின் கதவை தட்டியதாம் நகையும் பணமும் என்று இலைக்கட்சிக்காரர்கள் சொல்றாங்க. இதனால கோபிக்காரருக்கு மந்திரி பதவி மட்டும் தான் கிடைத்ததாம். அதுவும் அவர் பார்த்த துறையில் பெருமளவான துட்டுக்கள் அனைத்துமே இலைக்கட்சி தலைவரிடம் தாம் சென்றதாம்.

இதற்கிடையில் மலராத கட்சியுடன் கூட்டணி சேர இலைக்கட்சி தலைவர் மறுத்த நேரத்தில் சேர்ந்தே ஆகவேண்டும் என சின்னமம்மியின் பின்னாடி இருந்து குரல் கொடுத்தாராம் கோபிக்காரர். கட்சியின் ரெண்டாங்கட்ட தலைகள் அனைவரும் பின்னாடி இருந்தாங்களாம். இதனால் வெலவெலத்துப்போன இலைக்கட்சி தலைவர் ஓடிபோய் மலராத கட்சியின் காலில் விழுந்து தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டதுடன், ஒன்றிய ரைடில் இருந்தும் தப்பித்துக்கொண்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க. எல்லா பவரும் தன்னிடம் தான் இருக்கிறது என்ற நினைப்பில் இலைக்கட்சி தலைவர் செயல்பட்டதால் சின்னமம்மிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்ததாம். ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என சின்னமம்மியின் பின்னாடி இருக்கும் மலராத கட்சி, இலைக்கட்சி தலைவருக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாம். முதற்கட்டமாக ஒன்றிணைய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்மி காலத்தில் இருந்தது போல ஐவர்குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்திடலாம் என்று சொன்னாங்களாம். இதற்கு சம்மதம் தெரிவித்த இலைக்கட்சி தலைவர் மா.செ.கூட்டத்தில் அதைப்பத்தி பேசாமல் கூட்டத்தை முடிச்சிட்டாராம். அதோடு சுற்றுப்பயணத்தில் யாரும் செலவு செய்யவில்லை. நான் தான் எல்லா செலவையும் செய்கிறேன்.

2 தொகுதிக்கு ஒரு மா.செ.பதவியை போடப்போகிறேன் என்றாராம். பேசவேண்டியதை பேசாமல் இதென்னபேச்சு என நினைத்த சின்னமம்மியின் ஆதரவு மா.செ.க்கள் அதிர்ச்சியடைந்தாங்களாம்.. இனிமேலும் அமைதியாக இருந்தால் இலைக்கட்சி தலைவருக்கு கிடைக்கவேண்டிய எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும். கட்சி வீணாகி போயிடும் என்ற நிலை ஏற்பட்டவுடன் தான் சின்னமம்மி மூலமாக கோபி செட்டிப்பாளையத்துக்காரர் போர்க்குரலை தூக்கினாராம். இதற்கெல்லாம் இலைக்கட்சி தலைவர் அசைந்து கொடுக்கப்போவதில்லையாம். கோபிக்காரரின் மா.செ.பதவியை பறித்து அவரை முடக்கவும் முடிவு செஞ்சிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க. அதே நேரத்தில் இம்முறை கோபிக்காரரின் குரல் ஓங்கினாலும், எதுவும் செய்யமாட்டார். எல்லோரும் ஒன்றிணையவேண்டும் என்பது தான், அவரது நிலைப்பாடாக இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

‘மலர் பார்ட்டியில் சீட்டுக்கு துண்டு போடுற அம்மினியை பற்றி தெரியுமா’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல சட்டத்தோட மன்ற தேர்தல் அடுத்த வருஷம் அதாவது இன்னும் சில மாதங்கள்ல நடக்கப்போகுது. இதுக்காக இப்பவே பல அரசியல் கட்சிகளோட கூட்டு அணி விவகாரம் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்குது. இதுல, இலையும், மலரும் கூட்டு அணி, கூட்டு அணி என்று பேசிவந்தாலும், அப்பப்ப கொஞ்சம் உரசல்கள் அவங்களுக்குள்ள இருக்கத்தான் செய்யுது. தொண்டர்களுக்கு இந்த கூட்டணியில உடன்பாடு இல்லையாம். இப்படி எல்லா வகையிலயும் ஏழாம் பொருத்தமாக இருக்குற நிலையில, வெயிலூரைச் சேர்ந்த கார்த்திகை பெண்மணி சத்தமில்லாம சீட் கேட்குற.. இல்ல. இல்ல.. சீட் பிடிக்குற வேலைய தொடங்கிட்டாராம். அதுவும் வேட்பாளர அறிவிக்குறதுக்கு முன்னாடி, 2 எழுத்து இனிஷியல் கொண்ட தொகுதி பெயரை போட்டு அவரோட பிறந்தநாள் பேனர்ல சட்டமன்றமேன்னு பதிவு செய்யப்பட்டிருக்குதாம். இதைப்பார்த்த இலை பார்ட்டிகள் தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்குது, அதுவும் கூட்டு அணியில, இவங்களாகவே எப்படி அந்த தொகுதின்னு முடிவு செஞ்சி பர்த்டேவுக்கு பேனரும் வைப்பாங்களா? என்று கோபத்துல இருக்காங்களாம். கோபத்துக்கு காரணம் 2 எழுத்து இனிஷியல் தொகுதி கேட்கலாம்னு இலை பார்ட்டிகள்லயும் சில பேரு தயாராகி வர்றாங்களாம். அதுக்குள்ள இந்த கார்த்திகை பெண்மணி தொகுதிக்கு துண்டு போட்டதால, இலை பார்ட்டிகள், அட, அதுக்குள்ளவே தொகுதிக்கு துண்டு போட்டா நாங்க விட்டுருவோமா? என்று மலர் பார்ட்டி மேல, கடும் கோபத்துல இருக்காங்களாம். இதெல்லாம் இந்த பெண்மணிக்கு தெரிஞ்சுதான் நடந்துச்சா? தெரியாமயான்னு அவங்களுக்குள்ளாவே விசாரிச்சுகிட்டிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எல்லையில போலி அடையாள அட்டையை வெச்சி எஸ்கேப்பாகும் கும்பலுக்கு இப்போ கிடுக்கிப்பிடி போட்டப்பட்டு இருக்காமே?’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சுற்றுலாவுக்கு பெயர் போன புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அண்டையிலுள்ள தமிழக பகுதிகளிலிருந்து படையெடுப்பு அதிகளவில் இருக்குமாம். இதற்காகவே இரு மாநில எல்லைகளில் அந்நாட்களில் விசேஷ வாகன தணிக்கைகள் இடம்பெறுமாம். இவ்வாறு சோதனையின்போது சிக்குபவர்களில் பலர், தாங்கள் அரசு ஊழியர் என்பதற்கான அடையாள அட்டைகளை காண்பித்து நழுவி வந்தார்களாம். இது தொடர்கதையாகவே, சில அட்டைகளை சந்தேகத்தின்பேரில் வாங்கி பரிசோதித்தபோது அவை போலி அடையாள அட்டைகள் என தெரியவரவே இருமாநில காக்கிகளும் அதிர்ச்சிக்கு ஆளானார்களாம். கடல் ஊர், புரம் பெயர் கொண்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில நகராட்சிகள், துறைகளில் பணிபுரிபவர்களின் பட்டியலை தருமாறு கேட்ட காக்கிகள், போலிகளை தடுக்க புதிய அடையாள அட்டைகள் வழங்குமாறு முறையிட்டுள்ளதாம். போலி அட்டைகளை தயாரித்த கும்பலை தேடும் பணி ஒருபுறம் முடுக்கி விடப்பட்டிருக்க, மறுபுறமோ அனைத்து துறைகளும் இதேபோல் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாகி இருக்கிறதாம். இதுபற்றிதான் அந்த மாவட்டங்களில் பரவலாக பேச்சு’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement