தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இலை தலைவருக்காக தனியாக விசுவாசிகளை ரெடி பண்ணும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

 

‘‘பெண் ஆய்வாளர் மீது என்ன புகார்..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடலூர் மாவட்டம் அனல் மின் நிலையம் உள்ள பகுதியில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒரு வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் நெய்வேலி, நெய்வேலி தெர்மல், மந்தாரக்குப்பம், ஊ.மங்கலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளிக்க வரும்போது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, பாலியல் புகார், வரதட்சணை புகாரில் வழக்கு பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து பல லட்சங்களை வாங்கி குவிப்பது என இருக்கிறாராம்.

குறிப்பாக என்எல்சி அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பாலியல் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளார். மேலும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தனது கடலூர் புதுப்பாளையம் வீட்டிற்கு வரவழைத்து பணம் வாங்கி விடுகிறார். மேலும் ஆய்வாளர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன் என்றால், எனக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருக்கிறது. என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று கூறி வருகிறார்.

குறிப்பாக காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்களுக்கு போன் செய்து, உயர் அதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் வருகிறது. எனவே முன்ஜாமின் எடுத்துக் கொள் தலைமறைவாக இரு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். எனவே இது குறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறை வட்டார நிலவரம் என்ன’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சென்டரல் ஜெயில்ல காக்கிகள் சோதனை நடத்தி, கடமைக்காக சிம்கார்டு இல்லாத செல்போனும், காத்துல கரைஞ்சி போறமாதிரி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்றாங்களாம். இப்படி பறிமுதல் செய்தாலும், இந்த பயன்பாடுகள் குறையவே இல்லையாம். மாறாக இதோட டிமேன்ட் ஏறிக்கிட்டேதான் போகுதாம். ஜெயிலுக்குள்ள செல்போன், கஞ்சா சப்ளை செய்றதுக்கு தனி ரேட் போட்டு ஒரு கூட்டம் ராஜபோக வாழ்க்கை வாழுறாங்களாம். செம வசூல் நடக்குதாம். பதிலுக்கு சில கைதிங்களும் ஜாலியா இருக்கிறாங்களாம்.

ரேட் கைக்கு வராததாலத்தான், அப்பப்போ ஏதோ சிக்குச்சுன்னு கணக்கு காட்டுறாங்களாம். சமீபத்துல கூட 2 முறை கோர்ட்டுக்கு போய்ட்டு வரும்போது, கஞ்சா கடத்தியதாக கைதிங்க 2 பேரு சிக்குனாங்க. அதுக்கு காரணம் பேசுன ரேட்டு கைக்கு வராததாலத்தான் சோதனையில கஞ்சா சிக்குச்சுன்னு கணக்கு காட்டுறாங்கன்னு, ெஜயிலுக்குள்ள இருக்குற விவரம் தெரிஞ்ச காக்கிகளே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவருக்காக தனியாக விசுவாசிகளை தயார் பண்றாங்களாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் எதைப்பண்ணினாலும் பிளான் பண்ணித்தான் செய்வாருன்னு அவருக்கு நெருங்கிய அடிப்பொடிகள் சொல்றாங்களாம்.. இலைக்கட்சியை பொருத்தவரையில் தனக்கென உயிரை கொடுப்பேன் என சொல்லும் அளவுக்கு தீவிர விசுவாசிகள் யாரும் இல்லையாம்..

அவ்வாறு ஒரு டீமை உருவாக்க இலைக்கட்சி தலைவர் ரொம்பவே தீவிரமா இருக்காராம்.. இதற்கான பணியை அவரது சன்னிடம் ஒப்படைச்சியிருக்காராம்.. அதுவும் சீனியர்களை சீண்டாமல் நடக்கும் இந்த பணி முடிந்துவிட்டதாக சொல்றாங்க.. கட்சியில் பழம் தின்னு கொட்டைப்போட்ட, பவர் புல்லா இருக்கிறவர்களை தொடுவது இல்லையாம்.. ஒரு மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருக்கிறது என்றால், மாவட்ட செயலாளருக்கு 3 தொகுதியை கொடுத்துவிடுவார்.

அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து வெற்றியோடு வெளியே வர வேண்டும். மீதமுள்ள 3 தொகுதியில் இலைக்கட்சி தலைவர் தனக்கு வேண்டியவர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துவிடுவார். அவர்கள் இலைக்கட்சி தலைவரின் தீவிர விசுவாசியாக இருப்பதுடன், இக்கட்டான சூழ்நிலையில் இலைக்கட்சி தலைவருக்காக உயிரை கேட்டாலும் கொடுக்கணும்.. பதவியை ராஜினாமா செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டதாம்...

தற்போதுள்ள சூழ்நிலையில் இலைக்கட்சி வெற்றிபெறுவது என்பது நடக்காத காரியம்.. ஆனால் கூட்டணி ஆட்சிதான் அமைப்பேன் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அடிச்சி சொல்றாராம்.. அப்படி ஒன்று நடக்கவே நடக்காதுன்னு இலைக்கட்சி தலைவர் சொல்லிக்கிட்டிருக்கும் நிலையில், தனது ஆதரவாளர்கள் அதிகமானோர் வெற்றிபெற்றால், எந்த முடிவாக இருந்தாலும் தானே எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க... இவ்வாறு அவருக்காக உயிரை கொடுக்கும் 100 பேரை தேர்வு செஞ்சி வச்சிருக்காராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவி சீட் பிடிக்கிற வேகத்துல ஒருத்தர ஒருத்தர் காலை வாரிக்கிட்டு இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாவட்டத்தின் 10 தொகுதிகளிலுமே இம்முறை இலைக்கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் வெகுதூரத்தில் இருப்பதாக வந்திருக்கும் தகவல்களால் கட்சித்தலைமை கதி கலங்கியிருக்கிறதாம். சர்வே டீம் போட்டு உண்மை நிலைமையை கண்காணித்துச் சொல்ல உத்தரவிட்டிருக்கிறதாம்.

மாவட்ட செயலாளர்களே அறிக்கை தந்தாலும், இந்த டீம் தரும் அறிக்கைக்கே முக்கியத்துவம் தரப்பட இருக்கிறதாம். இதையறிந்த கட்சி நிர்வாகிகளில் பலரும், டீமில் இருப்பவர்களைச் சந்தித்து டீல் பேசி பேமென்ட் தந்து தனக்கே ஆதரவிருப்பதாக பட்டியலில் பதிவு செய்யும் காரியத்தில் கூடுதல் கவனம் காட்டி வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க இருமுறையும் தனக்கே தொகுதி தரலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிற ‘பெரிய’ பெயர் கொண்டவருக்கு இம்முறை வெற்றி வலிமை குன்றி விட்டதென, இப்பகுதியின் ஒன்றிய நிர்வாகியே தகவல் பரப்பி வருவதும், கான்ட்ராக்ட்காரர்களிடம் தனது பெயரைப் பயன்படுத்திப் பேசி தனக்கு சரிவைத் தருவதுமாகவும் எதிர்வினையாற்றி வருவதாகவும் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி வைத்துள்ளாராம்.

இப்படி அத்தனை தொகுதியிலும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, மேலே தாங்கள் வருவதில் இலைக்கட்சி நிர்வாகிகளின் வேகம் இன்னும் அதிகரித்திருக்கிறது. பதவி சீட் பிடிக்கிறதுல காட்டுற ஆர்வத்துல கொஞ்சமாவது, தேய்ந்து வரும் கட்சியை வளர்க்குறதுல காட்டக்காணோமே என்று சக இலைக்கட்சித் தொண்டர்கள் ஆதங்கப்பட்டு புலம்பித்தவிக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.