வழக்கு விசாரணையின்போது மீண்டும் மீண்டும் குறுக்கிட்ட வழக்கறிஞர்: உச்சகட்ட கடுப்பான தலைமை நீதிபதி!
04:52 PM Jul 23, 2024 IST
Share
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு இடையூறு செய்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவை, அறையில் இருந்து வெளியேற்றச் சொல்லி காவலர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றால் நானே வெளியேறுகிறேன் என கூறிவிட்டு மீண்டும் குறுக்கிட்டு பேசியதால் சந்திரசூட் ஆவேசம் அடைந்துள்ளார்.