வக்கில் கொலையில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் மீது குண்டாஸ்
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகரை சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் (35) கொலை வழக்கில் பள்ளி தாளாளர் தண்டபாணி உட்பட 15 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தால் அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதையடுத்து திருப்பூர் கலெக்டர் உத்தரவின் பேரில், தனியார் பள்ளி தாளாளர் தண்டபாணி, நாட்டு துரை, கூலிப்படையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
Advertisement
Advertisement