ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கனஅடியில் இருந்து 78,000 கனஅடியாக அதிகரிப்பு
Advertisement
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கனஅடியில் இருந்து 78,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டும். கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement