வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக வரும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., குழு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. ...
கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகை!
கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பிரியங்கா வயநாடு மக்களை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்த நிலையில் இருவரும் வருகை தந்துள்ளனர். கேரள மாநில காங். கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்து சோனியா, ராகுல் பேச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. ...
குளித்தலை அருகே ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
குளித்தலை: குளித்தலை அருகே ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தார். விபத்தைக் காண வந்த மாற்றுத்திறனாளி நபரும் வேறொரு ரயில் மோதி உயிரிழந்தார். அன்னக்கிளி (52) விபத்தில் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதியினர் அங்கு சென்றனர். காது கேளாத வாய் பேச இயலாத ராஜலிங்கம் தண்டவாளத்திலேயே நடந்துவரும் போது ரயில் மோதி உயிரிழந்தார். ...
தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்தது. தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ...
சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...
வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
நெல்லை: வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாக்காளர் பட்டியலை தீயிட்டு கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
சேலம்: எடப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் 200க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது. ...
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு!
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கலாச்சார அமைச்சகம், தொல்லியல் துறை பதில்தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ். டேவிட் யேல் மற்றும் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறையை அகற்றுவதை எதிர்த்து மனு. கல்லறை கட்டுமானங்கள் தற்போது என்ன நிலையில் உள்ளனவோ, அந்த நிலையே தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....