கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்றபடி கிராம மக்கள் போராட்டம்
10:37 AM Aug 05, 2025 IST
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தண்டவாளத்தில் நின்றபடி கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இலங்கியனூர் 73ஆவது ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இலங்கியனூர் பிஞ்சனூர், வலசை உள்ளிட்ட கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.