முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார்
சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவியின் உடல் சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் வசந்தி தேவி. சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் வசந்தி தேவி. கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர வசந்தி தேவி பாடுபட்டுள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்தவர் வசந்தி தேவி. சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்திதேவி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார். 1973ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் கல்வியாளர் வசந்தி தேவி. 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.