யுரேனியம் ஹெக்ஸா ஃப்ளூரைடையும் ரஷ்யாவிடம் இருந்துதான் அமெரிக்கா வாங்கி வருகிறது டிரம்ப்-க்கு இந்திய வெளியுறவுத் துறை பதில்
டெல்லி: ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. பல்லேடியம் உலோகத்தையும், அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியம் ஹெக்ஸா ஃப்ளூரைடையும் ரஷ்யாவிடம் இருந்துதான் அமெரிக்கா வாங்கி வருகிறது என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறிய நிலையில் இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.