டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்..!!
Advertisement
டெல்லி: டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மே 29ம் தேதி அமெரிக்கா - இந்தியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய-அமெரிக்க அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான கூட்டம் 4 முறை நடத்தப்பட்டுள்ளன. நம் நாட்டு விவசாயிகள், தொழில்முனைவோரின் நலனை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்துவகையான முடிவுகளும் எடுக்கப்படும். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் தேசிய நலனுக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கனவே இந்தியா செய்துள்ளது. 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு என தெரிவித்தார்.
Advertisement