திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விரைவில் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைகொடுக்கும் வகையில் புதிய தொழிற்சாலை விரைவில் அமைய உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை சேர்க்காமல் இருக்க மிக கவனமாக செயல்படுவோம். மிக முக்கியமாக வட இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்தவர்கள், நிரந்தர முகவரி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement