திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயில் இடிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் புதுவாயல் -சின்னக்காவனம் வரை இரு வழிப்பாதை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.2 இயந்திரங்கள் உதவியுடன் கோயிலை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று இடத்தில் கோயிலை கட்ட இழப்பீடு வழங்கிய பின்பே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.