திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி..!!
திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக குறைக்க கூட்டத்தில் அலுவலகத்தின் முன்பு ஆர்கே பேட்டை அருகே சித்தப்பனூர் பகுதியைச் சேர்ந்த பரிமளா என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக பழைய fmb யை திருத்தி புதிய fmb யில் தங்களுடைய நிலத்தின் அளவை குறைத்து ஆவண மோசடி செய்து போலியான புதிய வரைபடத்தை வைத்துக் கொண்டு நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இத்தகைய புகாருக்கு நடவடிக்கைக்கு எடுக்காததால் விரக்த்தியில் தற்கொலை முயற்சி என புகார் தெரிவிக்கப்பட்டது.