தரங்கம்பாடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
மயிலாடுதுறை: தரங்கம்பாடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக எஞ்சினை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கத் தவறிய அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், சின்னமேடு, வானகிரி உள்ளிட்ட கிராம மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குநர், தரங்கம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.