ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைந்து வெல்வோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைந்து வெல்வோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 7ல் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் திமுகவினர் கடலென திரள வேண்டும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ, அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்.