சென்னை :தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று 4 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழி, கொள்ளிடத்தில் தலா 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 10 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.