தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
10:09 AM Jul 31, 2025 IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் 5 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.